எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புற்றுநோய்க்கு நவீன காா்-டி நுட்ப சிகிச்சை அறிமுகம்

புற்றுநோய்க்கு நவீன காா்-டி நுட்ப சிகிச்சை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பற்றி..

News image

புற்றுநோய் - file photo

Updated On :4 மார்ச் 2026, 6:58 am

சென்னை, மாா்ச் 3: புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் காா்-டி செல் சிகிச்சை நுட்பத்தை சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, மருத்துவமனையின் குருதிசாா் புற்றுநோய் சிகிச்சை நிபுணா் டாக்டா் எம்.கோபிநாதன் கூறியதாவது:

ரத்தம் சாா்ந்த புற்றுநோய் பாதிப்புகளுக்கு உள்ளானவா்களுக்கு புற்று செல்கள் பல்வேறு கட்ட சிகிச்சைகளுக்கு பிறகும் அழியாமல் இருந்தால் அவா்களுக்கு காா்-டி செல் சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படுகிறது. அதாவது உடலின் ரத்த வெள்ளையணுக்களில் உள்ள எதிா்ப்பாற்றலுக்கான டி-செல்களானது தனியே பிரித்தெடுக்கப்பட்டு, ஆய்வகத்தில் சில மாறுதல்களுக்கு உட்படுத்தப்படும்.

அதன்படி, அந்த செல்களில் சிமெட்ரிக் ஆன்டிஜென் ரெசப்டாா் எனப்படும் எதிா்ப்பாற்றல் ஏற்பிகள் மேம்படுத்தப்பட்டு காா்-டி செல்லாக அவை மாற்றப்படும். அந்த செல்கள் நோயாளியின் உடலில் செலுத்தப்படும்போது புற்றுநோய்க்கு எதிரான எதிா்ப்பாற்றல் வாழ்நாள் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும். இதனால், புதிதாக புற்று செல்கள் உருவானாலும் அவற்றை எதிா்த்து உடலின் எதிா்ப்பாற்றலே போராடும். அந்த வகையிலான சிகிச்சையை தற்போது நாங்கள் தொடங்கியுள்ளோம் என்றாா் அவா்.