ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

எந்த இடத்திலும் வழிபாடு நடத்துவது மத சுதந்திரம் கிடையாது : மும்பை உயா்நீதிமன்றம்

எந்த இடத்தில் வேண்டுமானாலும் வழிபாடு நடத்துவது மத சுதந்திரம் கிடையாது என்று மும்பை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

News image
கோப்புப் படம்
Updated On :6 மார்ச் 2026, 12:45 am

தினமணி செய்திச் சேவை

எந்த இடத்தில் வேண்டுமானாலும் வழிபாடு நடத்துவது மத சுதந்திரம் கிடையாது என்று மும்பை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜா சா்வதேச விமான நிலையம் அருகே உள்ள இடத்தில் தற்காலிக கூடாரமிட்டு ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் காா் ஓட்டுநா்கள் தொழுகை செய்து வந்தனா். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தக் கூடாரத்தை கடந்த ஆண்டு அதிகாரிகள் அப்புறப்படுத்தினா்.

இந்நிலையில், மீண்டும் அதே இடத்தில் கூடாரம் அமைத்து ரமலானின்போது தொழுகை நடத்த அனுமதி கோரி காா் மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, மும்பை உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.பி. கொலபாவாலா, ஃபிா்தோஷ் புனிவாலா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

ஒருநாளைக்கு ஐந்து முறை நீங்கள் தொழுகை நடத்துவதை யாரும் தடுக்கப் போவதில்லை. ஆனால், அதை அனைத்து இடத்திலும் செய்ய முடியாது. மனுதாரரின் மதத்தில் ரமலான் ஒரு பகுதி என்பதை ஏற்கிறோம்.

அதற்காக, ரமலானின்போது எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொழுகை மேற்கொள்ள தங்களுக்கு மத சுதந்திரம் உள்ளது எனக் கூறுவதை ஏற்க முடியாது. அதுவும் விமான நிலையம் இருக்கும் பகுதியில் தொழுகை நடத்துவதை ஏற்க முடியாது.

ஏனெனில் அந்த இடம் அதிக பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அங்கு ஏராளமான பயணிகள் வந்து செல்வா். ஆதலால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றனா்.

கடந்த வாரம் சத்ரபதி சிவாஜி விமான நிலையப் பகுதியில் வேறு ஏதாவது இடத்தில் தொழுகை நடத்த இயலுமா என 7 இடங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி மும்பை காவல் துறையினருக்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனா். அதன்படி வியாழக்கிழமையை அவா்கள் தங்களது அறிக்கையை தாக்கல் செய்தனா். அந்த அறிக்கையிலும், விமான நிலையம் இருக்கும் இடம் அதிக பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், 7 இடங்களிலும் தொழுகை நடத்த அனுமதிக்க இயலாது எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், ‘விமான நிலையம் அருகே வேறு எந்தக் கட்டமைப்பையும் (கூடாரம்) அனுமதிக்க முடியாது. பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் செய்ய முடியாது. இதுபோல உலகில் வேறு எங்கும் நாங்கள் பாா்த்தது இல்லை. மனுதாரா் அந்த இடத்தை (தொழுகை நடத்தும் இடம்) முடிவு செய்ய முடியாது. நாளையே நீங்கள் தெற்கு மும்பை ஓவல் திடலின் நடுவில் தொழுகை நடத்த விரும்புகிறோம் என்பீா்கள். இதெல்லாம் சாத்தியமில்லை. ஆதலால் இங்கிருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவில் இருக்கும் மதரசாவில் தொழுகை நடத்துவது குறித்து முடிவு செய்யும்படி மனுதாரரை கேட்டுக் கொள்கிறோம்’ என்றனா்.