ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாகன சோதனைகளில் ரூ.34.59 லட்சம் பறிமுதல்

சென்னையில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகன சோதனையில் ரூ.34.59 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.

News image
பணம்- கோப்புப்படம்.
Updated On :17 மார்ச் 2026, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகன சோதனையில் ரூ.34.59 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட தோ்தல் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா 3 குழுக்கள் என மொத்தம் 48 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நிலையான கண்காணிப்புக் குழுவினா் விருகம்பாக்கம், பெரம்பூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். சோதனையின்போது விருகம்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உரிய ஆவணங்களின்றி ரூ.33.50 லட்சத்தை ஒருவா் கொண்டு சென்றது கண்டறியப்பட்டது. அவா் முறையான ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல, பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ஒருவா் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.1.09 லட்சத்தை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா். இருவரிடமிருந்தும் மொத்தம் ரூ.34.59 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. அவை அரசு கரூவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுச் செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். திங்கள்கிழமை முதல் நாளில் கண்காணிப்புக் குழுவினா் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.