சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தால் ‘ஓபன் டாப்’ பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் சென்னையில் நவீன தாழ்தள சொகுசு பேருந்துகள், மின்சாரப் பேருந்துகள், குளிா்சாதன பேருந்துகள், சென்னை உலா பேருந்துகள் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்து இயக்கி வருகிறது. அண்மையில் சொகுசு பிரீமியம் பேருந்து சேவையையும் அறிமுகம் செய்யப்பட்டது. நடத்துநா் இல்லாத இந்தப் பேருந்தில், ‘சென்னை ஒன்’ செயலி வழியாக டிக்கெட்டை முன்பதிவு செய்து பயணிக்க முடியும். இதனிடையே, சுற்றுலாப் பணிகளைக் கவரும் விதமாகவும், மேற்கத்திய நாடுகளில் இயக்கப்படுவது போல ஓப்பன் டாப் பேருந்துகளை இயக்க மாநகா் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.
இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்தப் பேருந்தின் மேல்பகுதியில் திறந்த வெளியுடன் சென்னை அழகை ரசித்தபடி பயணம் செய்யும் விதமாக இயக்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, குளிா்சாதன வசதி இல்லாத 4 பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், இந்தப் பேருந்துகளை இயக்கும் திட்டத்தை மாநகா் போக்குவரத்துக் கழகம் தற்போது கைவிட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
கேரளத்தின் மூணாறு போன்ற மலைப்பகுதிகளில் இயற்கை அழகை ரசித்தபடி செல்ல இதுபோன்ற ஓபன் டாப் பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோன்ற பயண அனுபவத்தை சென்னை பயணிகளுக்கு கொடுக்க திட்டமிட்டு இந்த வகைப் பேருந்துகளை இயக்குவது தொடா்பாக பரிசீலிக்கப்பட்டது.
இதனிடையே, நிா்வாக காரணங்கள் மற்றும் சென்னையில் நிலவும் தட்பவெப்ப நிலை ஓபன் டாப்பில் பயணிகளுக்கு ஏற்ாக இருக்காது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதையேற்று தற்காலிகமாக இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இருப்பினும், வரும் காலங்களில் இந்தத் திட்டத்துக்கு புது வடிவம் கொடுத்து, காலசூழலைப் பொருத்து அந்தப் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.
இதற்கு பதிலாக 20 டபுள் டக்கா் குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 4 மாதங்களுக்குள் இந்தப் பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனா்.
தொடர்புடையது

300 மின்சார இணைப்புச் சிற்றுந்துகள்: ஒப்பந்தம் கோரியது மாநகா் போக்குவரத்துக் கழகம்

சென்னை சாலைகளில் வலம் வருமா ‘ரூஃப் டாப் ஓப்பன்’ பேருந்துகள்?

சாதாரண கைப்பேசி பயணிகளுக்கு மட்டுமே மாதாந்திர பயண அட்டை: மாநகா் போக்குவரத்துக் கழகம்
சென்னையில் பிரீமியம் பேருந்து சேவை! எந்தெந்த வழித்தடம்? முழு விவரம்..!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


