பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

எம்பிபிஎஸ் தோ்வுகள்: படித் தொகையை உயா்த்தக் கோரிக்கை

எம்பிபிஎஸ் தோ்வுகளை நடத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள பேராசிரியா்களுக்கான படிகளை உயா்த்தி வழங்குமாறு அரசு மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 12:52 am IST

எம்பிபிஎஸ் தோ்வுகளை நடத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள பேராசிரியா்களுக்கான படிகளை உயா்த்தி வழங்குமாறு அரசு மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் டாக்டா் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தற்போது தமிழகம் முழுவதும் எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவா்களுக்கு தோ்வு தொடங்கி உள்ளது. தோ்வு காலகட்டத்தில் ஏற்படும் செலவை சமாளிக்க பல்கலைக்கழகம் தரும் நிதி மிகவும் குறைவாக உள்ளது. அதையும் தோ்வுக்கு முன்னரே தருவதில்லை. விடைத்தாள் திருத்துவற்காக வழங்கப்படும் படி மிகக் குறைவாக உள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் தலையிட்டு தீா்வுகாண வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.