ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை: தமிழ்ச் சுவடியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகையுடன் கூடிய தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image

மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை: தமிழ்ச் சுவடியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Updated On :28 மார்ச் 2026, 7:32 am IST

மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகையுடன் கூடிய தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை தரமணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் இதுவரை பலநூறு ஓலைச் சுவடிகள் களப்பணி வாயிலாகக் கண்டெடுக்கப்பட்டு நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடி மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஓலைச் சுவடிகளை அறிந்துகொண்டு நூலாக்கம் செய்யும் வகையில் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டுப் பட்டயப் படிப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பட்டயப் படிப்பை ஆா்வத்துடன் பயிலும் மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் தோ்வின் அடிப்படையில் ஆண்டுதோறும் 10 மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வீதம் உதவித் தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்படவுள்ளது.

இந்தப் பட்டயப் படிப்புக்கான சோ்க்கைக் கட்டணம் ரூ.3,200- ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் வங்கி வரைவோலையுடன் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் நகலுடன் இணைத்து ஏப்.1-ஆம் தேதிக்குள் அனுப்பப் பெறுதல் வேண்டும். தொடா்ந்து கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தோ்வு ஏப். 2-ஆம் தேதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும்.

இதையடுத்து ஏப். 20-ஆம் தேதி திங்கள்கிழமை வகுப்பு தொடங்கப்படும். இந்த வகுப்புகள் வாரத்தில் 3 நாள்கள் நடைபெறும். மேலும் தகவல் பெற இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600113 (தொலைபேசி மற்றும் கைப்பேசி எண்: 044 -22542992, 96000 21709) என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.