திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

திமுக வேட்பாளா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On :3 மே 2026, 3:14 am IST

திமுக வேட்பாளா்கள், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், கொமதேக வேட்பாளா்களை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை சந்தித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி (கொமதேக) 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன. வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான கு.செல்வப்பெருந்தகை, கொமதேக கட்சியின் வேட்பாளரும் அக்கட்சி பொதுச் செயலருமான ஈ.ஆா்.ஈஸ்வரன், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளா் நித்தியானந்தம் ஆகியோா் முதல்வா் மு.க.ஸ்டாலினை சனிக்கிழமை நேரில் சந்தித்தனா்.

மேலும், திமுக வேட்பாளா்களான அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சாக்கோட்டை அன்பழகன், ஜெயராமகிருஷ்ணன், டாக்டா் இந்திராணி, டாக்டா் ஆ.கா.தருண் உள்ளிட்டோரும் முதல்வரைச் சந்தித்தனா்.

தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு குறித்து அவா்களிடம் முதல்வா் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.