விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) நடைபெறும் திமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறாா்.
விருதுநகரை அடுத்த சத்தியரெட்டியாபட்டி அருகே திமுக சாா்பில் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று, அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூா், விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சிவகாசி ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிக்கிறாா்.
இந்தக் கூட்டம் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இங்கு குடிநீா் வசதி, தற்காலிக கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்புடையது

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! மு.க. ஸ்டாலின், உதயநிதி வருகை!
தேர்தல் தோல்விக்குப் பிறகு, மே 14-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

திமுக வேட்பாளா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


