பேரவைத் தலைவரை கரம்பிடித்து அமரவைக்கும் சம்பிரதாயம்! முதல்வர் விஜய் கூறிய குட்டிக்கதைஎல்பிஜி சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும்! குறுந்தகவல் சொல்வது என்ன?50 கார்களில் அணிவகுத்த பாஜகவின் சௌபாக்ய சிங் தாகூர்! இதுதான் சிக்கனமா?நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை! உச்ச நீதிமன்றத்தில் தவெக எம்எல்ஏ மேல்முறையீடு! தவெகவுக்கு ஆதரவு! எம்.எல்.ஏ. காமராஜ் அமமுகவிலிருந்து நீக்கம்!நீட் தேர்வில் ஸ்கேம் இல்லை; நீட்டே ஒரு ஸ்கேம்தான்! - ஸ்டாலின்நீட் மறுதேர்வுக்கு கட்டணம் இல்லை! செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்! மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து!
/

தேர்தல் தோல்விக்குப் பிறகு, மே 14-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பற்றி...

News image

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - கோப்புப்படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (மே 14) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தொடர்ந்து 2-ம் முறையாக ஆட்சியமைக்கும் என்று மு.க. ஸ்டாலின் கூறிவந்த நிலையில், திமுக பெரும் தோல்வியைச் சந்தித்து தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது. தவெகவுக்கு தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் சில கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது.

இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (மே 14 ஆம் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

"கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் 14-05-2026 வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.

அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் தோல்வி மற்றும் கட்சியின் அடுத்தகட்ட பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story image

Summary

DMK District Secretaries Meeting on May 14

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.