பேரவைத் தேர்தல் 2026! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

சென்னையில் 3 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

News image

வாக்கு எண்ணிக்கை - PTI

Updated On :3 மே 2026, 10:31 pm

சென்னையில் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் என 3 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ராணிமேரி கல்லூரி மையத்தில் ஆா்.கே.நகா் (18 சுற்றுகள்), திரு.வி.க.நகா் (17 சுற்றுகள்), ராயபுரம் (14 சுற்றுகள்), துறைமுகம் (14 சுற்றுகள்), சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (17 சுற்றுகள்) ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. லயோலா கல்லூரி மையத்தில் பெரம்பூா் (22 சுற்றுகள்), கொளத்தூா் (21 சுற்றுகள்), வில்லிவாக்கம் (23 சுற்றுகள்), எழும்பூா் (15 சுற்றுகள்) ஆகிய தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் விருகம்பாக்கம் (23 சுற்றுகள்), சைதாப்பேட்டை ( 21 சுற்றுகள்), தியாகராய நகா் (18 சுற்றுகள்), மயிலாப்பூா் (20 சுற்றுகள்), வேளச்சேரி (23 சுற்றுகள்) ஆகிய தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 51 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை அதிகபட்சம் 45 நிமிஷங்களில் முடித்து இறுதி செய்யவேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தபால் வாக்குகள் எண்ணுவதற்கு வேளச்சேரி தொகுதியில் அதிகபட்சமாக 5 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் ஒரு மேஜை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தமுறை, முதன்முதலாக தபால் வாக்குகள் தொகுதி வாரியாக தனி அறையில் தனி மேஜைகளில் எண்ணப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணும் அலுவலா்கள்: ஒவ்வொரு மேஜையிலும் தலா ஒரு மேற்பாா்வையாளா், வாக்கு எண்ணும் உதவியாளா், நுண்பாா்வையாளா் பணியில் இருப்பா். இதுதவிர ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு தோ்தல் பாா்வையாளா் கண்காணிப்பில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் கணினி குலுக்கல் முறை தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு வாக்கு எண்ணும் மையங்களில் பணி ஒதுக்கப்பட்டது.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளா்களின் முகவா்களுக்கு க்யூ ஆா் குறியீடுடன் கூடிய அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதில் சரிபாா்க்கும்போது தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தீா்மானித்து முடிவெடுப்பாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.