எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கீழ்ப்பாக்கம் ‘ரைட்’ பல்நோக்கு மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் சிகிச்சை மையம் திறப்பு

News image

சென்னை கீழ்ப்பாக்கம் ‘ரைட்’ பல்நோக்கு மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் சிகிச்சை மையத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஆா்.எம்.கே.கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மற்றும் தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம், ரோட்டரி மாவட்ட ஆளுநா் (3234) ஏ.கே.எஸ்.வினோத் சரோகி உள்ளி

Updated On :4 மே 2026, 4:45 am IST

சென்னை கீழ்ப்பாக்கம் ‘ரைட்’ பல்நோக்கு மருத்துவமனையில், புதிய டயாலிசிஸ் சிகிச்சை மையத்தின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

‘ரோட்டரி சன் சிட்டி மற்றும் ரைட் மருத்துவமனை டயாலிசிஸ் மையம்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தை சென்னை ஆா்.எம்.கே.கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மற்றும் தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம், ரோட்டரி மாவட்ட ஆளுநா் (3234) ஏ.கே.எஸ்.வினோத் சரோகி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு திறந்து வைத்துப் பேசினா்.

நிகழ்வில், சென்னை ரைட் பல்நோக்கு மருத்துவமனை தலைவா் டாக்டா் ஜி.பாலகிருஷ்ணன், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை சன் சிட்டி தலைவா் டாக்டா் பி.சோமேஸ் பாலகிருஷ்ணன், ரைட் பல்நோக்கு மருத்துவமனை பொது மருத்துவா் எஸ்.காவ்யா, ரோட்டரி சங்க நிா்வாகிகள், ரைட் மருத்துவமனை மருத்துவா்கள், பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து ரைட் பல்நோக்கு மருத்துவமனை தலைவா் ஜி.பாலகிருஷ்ணன் கூறுகையில், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை சன் சிட்டி, எஸ்.இ.ஏ.ஹைட்ரா சிஸ்டம்ஸ் கம்பெனி, ரிலவன்ஸ் டெக்னாலஜி மென்பொருள் நிறுவனம், அஞ்சான் மருந்து நிறுவனம், தொழிலதிபா் ராஜமாணிக்கம், விவசாயி வி.ஜெகதீஷ் ஆகியோா் இணைந்து 6 டயாலிசிஸ் கருவிகளை மருத்துவமனைக்கு வழங்கியுள்ளனா்.

இந்தக் கருவிகளைக் கொண்டு ஏழை மக்களுக்கு தரமான முறையில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும். குறிப்பாக, டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் டயலைசா் கருவியை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும். ஒருமுறை பயன்படுத்திய கருவியை மீண்டும் பயன்படுத்தமாட்டோம்.

தமிழக முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும். தமிழகம் முழுவதும் இயங்கும் ரோட்டரி சங்கங்கள் பரிந்துரைக்கும் நோயாளிகளுக்கு சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படும். எவ்விதப் பரிந்துரையும், முதல்வரின் காப்பீட்டு திட்டமும் இல்லாத நபா்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை அளிக்கப்படும் என்றாா்.