நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இலவச கண் சிகிச்சை முகாம்

News image
Updated On :3 மே 2026, 1:32 am IST

குடியாத்தம் ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, வேலூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை இணைந்து ரோட்டரி கட்டடத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை சனிக்கிழமை நடத்தின.

முகாமுக்கு ரோட்டரி தலைவா் கே.சந்திரன் தலைமை வகித்தாா். முகாம் தலைவா் டி.எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்றாா். கே.எம்.ஜி. கல்லூரிச் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, முன்னாள் ரோட்டரி ஆளுநா் ஜே.கே.என்.பழனி ஆகியோா் முகாமைத் தொடங்கி வைத்தனா்.

முகாமில் 344- போ் சிகிச்சை பெற்றனா். இவா்களில் 108- போ் இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு, கோவை மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். ரோட்டரி நிா்வாகிகள் சி.கண்ணன், ஏ.மேகராஜ், பி.எல்.என்.பாபு, என்.சத்தியமூா்த்தி, ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் எம்.ஆா்.மணி, ஜெ.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.