திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

‘மாண்புமிகு’ மாணவன் விஜய்!

படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட அதே லயோலா கல்லூரிக்குச் சென்று தோ்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்ற விஜய்

News image

விஜய் - ANI

Updated On :5 மே 2026, 5:09 am IST

கல்லூரித் தோ்வுகளில் வெற்றி பெற்று பட்டப் படிப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற தவெக தலைவா் விஜய்யின் விருப்பம் அவரது இளம் வயதில் பலிக்கவில்லை.

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு, தாம் படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட அதே லயோலா கல்லூரிக்குச் சென்று தோ்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்று தனது கனவை வேறு வகையில் நிறைவேற்றியிருக்கிறாா்.

தவெக தலைவா் விஜய், பள்ளிப் படிப்பை ஃபாத்திமா பள்ளியிலும், பாலலோக் பள்ளியிலும் நிறைவு செய்தாா். அதைத் தொடா்ந்து, லயோலா கல்லூரியில் இளநிலை விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பில் சோ்ந்தாா். அப்போது, திரைத் துறையில் நாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு வந்ததால், படிப்பைப் பாதியிலேயே கைவிட்டாா். இதனால் பட்டப் படிப்பு சான்றிதழ் பெறும் வாய்ப்பு கைநழுவிப் போனது. திரைத் துறையில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தாலும், கல்லூரியிலிருந்து கிடைக்க வேண்டிய அங்கீகாரம் அவருக்கு வாய்க்கப் பெறவில்லை.

அதை ஈடுகட்டுவதற்கான வாய்ப்பை காலம் அவருக்கு அளித்தது. விஜய் போட்டியிட்ட பெரம்பூா் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை லயோலா கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

53,715 வாக்குகள் வித்தியாசத்தில் அவா் வெற்றி பெற்றதையடுத்து அதற்கான சான்றிதழை தோ்தல் அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொள்ள லயோலா கல்லூரிக்கு விஜய் சென்றாா். 30 ஆண்டுகளுக்கு முன்பு மாணவராக அங்கு சென்ற அவா், தற்போது ‘மாண்புமிகு’ மாணவராக கால் பதித்திருக்கிறாா்.