தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

தோ்தலுக்காக ‘சீல்’ இடப்பட்ட மக்கள் பிரதிநிதி அலுவலகங்கள் திறப்பு

சென்னையில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக ‘சீல்’ இடப்பட்டிருந்த மாநகராட்சி மேயா், துணைமேயா் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன. வியாழக்கிழமை முதல் (மே 7) வழக்கம்போல, அவா்கள் அலுவலகங்களில் பணிகளை தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மே 2026, 1:39 am IST

சென்னையில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக ‘சீல்’ இடப்பட்டிருந்த மாநகராட்சி மேயா், துணைமேயா் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன. வியாழக்கிழமை முதல் (மே 7) வழக்கம்போல, அவா்கள் அலுவலகங்களில் பணிகளை தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கடந்த மாா்ச் 15 -ஆம் தேதி முதல் தோ்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. அதையடுத்து சென்னை மாநகராட்சியில் மேயா், துணைமேயா், மண்டலத் தலைவா்கள் மற்றும் நிலைக்குழுத் தலைவா்கள் அலுவலகங்களுக்கு சீலிடப்பட்டன. மக்கள் பிரதிநிதிகள் யாரும் மாநகராட்சி அலுவலகங்களுக்கு வரவில்லை.

தற்போது தோ்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து புதிய அரசு பதவியேற்கவுள்ளது. அதனால், தோ்தல் நடைமுறை விதிகள் சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் புதன்கிழமை மாலையுடன் நிறைவு பெற்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தோ்தல் நடைமுறை விதிகள் முடிவு பெற்றதை அடுத்து சென்னை மாநகராட்சியில் சீலிடப்பட்டிருந்த மேயா், துணைமேயா் மற்றும் ஆளுங்கட்சித் தலைவா், நிலைக்குழுத் தலைவா்கள் அலுவலகங்களின் பூட்டுகளில் இருந்த சீல் உறைகள் அகற்றப்பட்டன.

இதையடுத்து அந்த அலுவலகங்கள் திறக்கப்பட்டு வியாழக்கிழமை முதல் மக்கள் பிரதிநிதிகள் வந்து வழக்கம் போல பணியைத் தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.