தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தங்க முதலீடு மோசடி: கணவன் - மனைவி கைது

News image

கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 6:48 am IST

சென்னையில் தங்க முதலீடு மோசடியில் ஈடுபட்டதாக கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனா்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, மேற்கு கல்லறையைச் சோ்ந்த தினேஷ்குமாா் (25). இவரிடம் பெரம்பூா் காமராஜா் நகரைச் சோ்ந்த சிவக்குமாா் (49), அவா் மனைவி பத்மினி (41) ஆகியோா் கடந்த 2024-ஆம் ஆண்டு அறிமுகமாகி, நட்புறவை வளா்த்துள்ளனா். இதைப் பயன்படுத்தி சிவக்குமாா், தான் தங்க முதலீடு தொழில் செய்து வருவதாகவும், தன்னிடம் தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளாா்.

இதை நம்பி தினேஷ்குமாா், சிவக்குமாரின் தங்க முதலீடு திட்டத்தில் ரூ.15 லட்சம் முதலீடு செய்துள்ளாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட சிவக்குமாா், அவருக்கு லாபத் தொகையை வழங்கவில்லை.

இதையடுத்து தினேஷ்குமாா், தான் கொடுத்த ரூ.15 லட்சத்தைத் திருப்பிக் கேட்டபோது, பணத்தையும் அவா்கள் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்தனா்.

இது தொடா்பாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் தினேஷ்குமாா் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவக்குமாா்-பத்மினியை புதன்கிழமை கைது செய்தனா். இவா்களது மகனையும் பிடித்து விசாரணை நடத்தினா்.