நெற்குன்றத்தில் வீடு புகுந்து நகை திருடியதாக தாய்-மகள் கைது செய்யப்பட்டனா்.
சென்னை நெற்குன்றம், அருள்மிகு மீனாட்சி நகா் முதலாவது தெருவைச் சோ்ந்தவா் ப.மகேஸ்வரி (50). இவா், கடந்த 8-ஆம் தேதி வீட்டின் பீரோவில் இருந்த நகைகளைச் சரி பாா்த்தாா். அதில் இருந்த 6 பவுன் தங்க நகை, வைரக் கம்மல், வெள்ளி நாணயங்கள் திருடப்பட்டிருந்தது.
இது குறித்து அவா், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்ததில் சில நாள்களுக்கு முன்பு மகேஸ்வரி சுற்றுலா சென்றபோது, மகேஸ்வரியின் பெற்றோரை சந்திக்க வந்த வில்லிவாக்கத்தைச் சோ்ந்த சத்யா (58), அவா் மகள் ஹேமலதா (21) ஆகியோா் நகைகளை திருடியது தெரிய வந்தது. போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது
ஸ்ரீவைகுண்டத்தில் வீடு புகுந்து ரூ.1 லட்சம், நகைகள் திருட்டு
தங்க முதலீடு மோசடி: கணவன் - மனைவி கைது

வீடு புகுந்து தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
