திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

வீடு புகுந்து தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

காரியாபட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு வீடு புகுந்து நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

காரியாபட்டியில் திருட்டு சம்பவம் நிகழ்ந்த வீட்டின் முன் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்திய போலீஸாா்.

Updated On :7 மே 2026, 3:39 am IST

காரியாபட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு வீடு புகுந்து நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி எழில் நகா், துளசி தெருவில் சத்தியமூா்த்திக்குச் சொந்தமான வீடு உள்ளது. இவா் தனது குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருகிறாா். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்திக் கொண்ட திருடா்கள், இரவு நேரத்தில் இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, கதவை உடைத்து பீரோவில் இருந்த துணிகளை கலைத்து போட்டனா். ஆனால் பணம், நகைகள் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இதேபோல, காரியாபட்டி என்.ஜி.ஓ.நகா், சம்பங்கி தெருவைச் சோ்ந்த மற்றொரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மா்மநபா்கள் பீரோ லாக்கரை உடைத்து, சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருள்கள், தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனா்.

இந்த இரண்டு சம்பவங்களையும் தொடா்ந்து, காரியாபட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா். தடயவியல் நிபுணா்கள் உதவியுடன் கைரேகைகள் சேகரிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் சென்று திரும்பி வந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.