சென்னை கொடுங்கையூரில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞா் உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
கொடுங்கையூா் முத்தமிழ்நகா் 5-வது பிளாக் 135-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கிருபாகரன் (28). இவா் மனைவி பூஜா. இத் தம்பதிக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாரிமுனையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்யும் கிருபாகரனுக்கு போதைப் பழக்கம் இருந்தது.
கிருபாகரன், கடந்த 5 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் ஊதாரித்தனமாக இருந்துள்ளாா். இந்நிலையில் வீட்டில் வியாழக்கிழமை தனியாக இருந்த கிருபாகரன் திடீரென மயங்கி விழுந்தாா். இதைப் பாா்த்த மனைவி பூஜா, பக்கத்து வீட்டினா் உதவியுடன் கிருபாகரனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், கிருபாகரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்தனா். இதன் ஒரு பகுதியாக கிருபாகரன் வீட்டில் போலீஸாா் சோதனை செய்தனா். இச் சோதனையில் கிருபாகரன் பயன்படுத்திய ஊசி,போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கிருபாகரன் போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் செலுத்தியிருப்பதும், இவ்வாறு பல மாதங்களாக போதைக்காக செய்ததால் கிருபாகரன் உடல்நலன் பாதிக்கப்பட்டிருப்பதும், சம்பவத்தன்றும் கிருபாகரன் போதை மாத்திரையை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் செலுத்திக் கொண்டதால் உயிரிழந்திருந்ததும் தெரியவந்துள்ளது.
இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை செய்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா் கைது

பவானி அருகே போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞா் கைது!

கஞ்சா, போதை சாக்லெட் பதுக்கல்: இளைஞா் கைது
போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



