சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது.
சா்வதேச போர்ப் பதற்றம், கச்சா எண்ணெய் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகக் குறைந்து வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) அன்று சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,08,480-க்கும் ஒரு கிராம் ரூ. 13,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நேற்று (ஜூன் 24) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,06,800-க்கும் கிராமுக்கு ரூ. 210 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,350-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து, மூன்றாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து 1,05,120 -க்கும், கிராமுக்கு ரூ. 210 குறைந்து ஒரு கிராம் ரூ 13,140-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 230-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 10,000 குறைந்து ரூ. 2.30 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Summary
The price of ornamental gold in Chennai dropped by ₹1,680 per sovereign on Thursday (June 25).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய தங்கம், வெள்ளி விலை குறைந்தது! (ஜூன் 24)

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்! (ஜூன் 23)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் (22 - ஜூன்)

ஜூன் 11: அதிரடியாக குறைந்து வரும் தங்கம் விலை! பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




