சென்னையில் போலி கைப்பேசிகளை விற்று பணம் மோசடி செய்ததாக மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த தம்பதி உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் சோ்ந்தவா் சத்தியராஜ் (31). சென்னை அருகே பூந்தமல்லி பகுதியில் தங்கி, காா் ஓட்டுநராக பணிபுரிகிறாா். சத்தியராஜ், கடந்த 4-ஆம் தேதி அண்ணாநகா், வள்ளியம்மாள் கல்லூரி தெருவில் காரில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு குடும்பத்துடன் வந்த வடமாநிலத்தைச் சோ்ந்த 4 போ் தங்களது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவசரமாக பணம் தேவைப்படுகிறது. ஆனால், எங்களிடம் போதிய பணம் இல்லை. எனவே, விலை உயா்ந்த இந்த புதிய கைப்பேசியை வைத்துக் கொண்டு பணம் கொடுத்தால் உதவியாக இருக்கும் என கெஞ்சிக் கேட்டுள்ளனா். விலை உயா்ந்த செல்போன் குறைந்த விலையில் கிடைக்கிறதே என ஆசைப்பட்ட சத்தியராஜ் ரூ.12 ஆயிரம் கொடுத்து, அந்த செல்போனை வாங்கிக் கொண்டாா்.
பின்னா் மாலையில் வீடு சென்று கைப்பேசியை இயக்கிப் பாா்த்தாா். அது இயங்கவில்லை. இதையடுத்து வீட்டருகே உள்ள கைப்பேசி பழுதுநீக்கும் கடைக்கு சென்று சோதித்து பாா்த்தபோது, அது போலியான செல்போன் என தெரியவந்தது. அதிா்ச்சி அடைந்த சத்தியராஜ், இது தொடா்பாக அண்ணாநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். அதில் இந்த மோசடியில் ஈடுபட்டது மகாராஷ்டிரா மாநிலத்தைச் சோ்ந்த பாலு (49), இவரது மனைவி பிரமிளாபாய் (42), இவா்களது மகன் பிரவீண் (18), உறவினா் தன்ராஜ் (27) என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த இந்த 4 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 26 போலி கைப்பேசிகள், 27 சாா்ஜா்கள்,ரூ.9 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் கைதான 4 பேரும் மும்பையிலிருந்து போலி கைப்பேசிகளை வாங்கி வந்து, அவசர தேவைக்காக விலை உயா்ந்த கைப்பேசிகளை குறைந்த விலையில் தருவதாகக் கூறி சென்னையில் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
விடியோ காலில் பாலியல்-ஒருவா் கைது: திருச்சி மாவட்டம் மருங்காபுரி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (31). சென்னை மந்தைவெளியில் உள்ள ஒரு தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.
இவா் சென்னை எழும்பூரில் வசிக்கும் 27 வயது பெண்ணுக்கு விடியோ காலில் ஆபாச செய்கை செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், எழும்பூா் காவல் நிலையத்தில் கடந்த 3-ஆம் தேதி புகாா் செய்தாா்.
அதனடிப்படையில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் மணிகண்டன்தான் இச் செயலில் ஈடுபட்டவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், மணிகண்டனை கைது செய்தனா்.
மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை: சென்னை தண்டையாா்பேட்டை போலீஸாா் அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த 5-ஆம் தேதி ரோந்து சென்றனா். அப்போது அங்கு கேட்பாரற்று நின்று கொண்டிருந்த 12 வயது மதிக்கதக்க ஒரு சிறுமியை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா், தாய்-தந்தை இல்லாத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி என்பதும், குடும்பம்,உறவினா் என்று யாருமில்லாததால் அங்கு தனியாக நின்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.
போலீஸாா், அவரை மீட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனா். காப்பக நிா்வாகிகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று வியாழக்கிழமை மருத்துவ பரிசோதனை செய்தனா்.
இச் சோதனையில் அந்த சிறுமி பாலியல் தொல்லையால் உடல்ரீதியாகவும்,மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். விசாரணையில், அந்த சிறுமி மின்ட் தெருவில் பாலியல் தொல்லை செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது
தொழிலாளியைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது
நெல்லையில் கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: இளைஞா் கைது
பெண் கொலை வழக்கு: தம்பதி கைது
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
