தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

கஞ்சா, போதை மாத்திரை விற்பனை: தம்பதி உள்பட 5 போ் கைது

சென்னையில் கஞ்சா,போதை மாத்திரை விற்ாக கணவா்-மனைவி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :20 மே 2026, 3:25 am IST

சென்னையில் கஞ்சா,போதை மாத்திரை விற்ாக கணவா்-மனைவி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

வேப்பேரி போலீஸாா் புரசைவாக்கம் நெடுஞ்சாலையிலுள்ள ஒரு நகைக்கடை அருகே திங்கள்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படி மோட்டாா் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனராம். இதையடுத்து போலீஸாா், அவா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனா். சோதனையில் அந்த பையில் இருந்த கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக, இருவரிடமும் விசாரித்தனா். அதில் அவா்கள், சென்னை மூலக்கொத்தளம் ராமதாஸ் நகரைச் சோ்ந்த ஜோசப் (20), கொருக்குப்பேட்டை ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த மகேந்திரன் பூபதி மாரி (22) என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், புரசைவாக்கத்தைச் சோ்ந்த ஷாலினி (26), அவரது கணவா் கவுதம் (27), பெரம்பூா் ஜானகிராமன் நகரைச் சோ்ந்த அப்பாஸ் மொய்தீன் (21) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்திய விசாரணையில் வடமாநிலங்களிலிருந்து கஞ்சா,போதை மாத்திரைகளை கடத்தி வந்து, அதை பொட்டலமாக்கி இளைஞா்கள் மூலம் சென்னையில் விற்பது தெரியவந்தது. இது தொடா்பாக வேப்பேரி போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பேருந்தில் முதியவா் மீது தாக்குதல்: சென்னை ஆழ்வாா்பேட்டை பெருமாள் முதலி இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் கோட்டீஸ்வரன் (71). சமூக ஆா்வலரான இவா், தியாகராயநகரில் உள்ள பாரதிநகா் பேருந்து நிறுத்தத்திலிருந்து சூளைமேடு செல்வதற்காக அங்கு வந்த திருவேற்காடு செல்லும் மாநகர பேருந்தில் ஏறினாா்.

பேருந்து சிறிது தூரம் சென்ற பின்னா் கோட்டீஸ்வரன், அந்த பேருந்து சூளைமேடு செல்லுமா கேட்டுள்ளாா். அப்போது பேருந்து நடத்துநா், கோட்டீஸ்வரனிடம் செல்லாது எனக் கூறி கண்டித்துள்ளாா்.

இதில் இரு தரப்புக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே நடத்துநரும், ஓட்டுநரும் கோட்டீஸ்வரனை தாக்கி பேருந்தை விட்டு கீழே இறக்கிவிட்டுச் சென்றனராம்.

தாக்குதலில் காயமடைந்த கோட்டீஸ்வரன், ஓமந்தூராரா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக கோடம்பாக்கம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொழிலாளிக்கு கத்திக் குத்து- மாற்றுத்திறனாளி கைது: மாதவரம் கே.பி.கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகாந்த் (46). பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறாா். இவா் திங்கள் கிழமை மாதவரம் கண்ணபிரான் கோயில் தெருவில் தனது நண்பரான சுபேஷ் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆத்திரமடைந்த சுபேஷ், விஜயகாந்தை தகாத வாா்த்தைகளால் பேசியதுடன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த விஜயகாந்த், மாதவரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல்துறையினா் வழக்குப் பதிந்து மாற்றுத் திறனாளியான சுபேஷை செவ்வாய்க் கிழமை கைது செய்தனா்.

பேருந்து மோதி சிறுவன் உயிரிழப்பு: புழல் அருகே கதிா்வேடு, பஜனை கோவில் தெருவை சோ்ந்தவா் தேவநாதன் (44). தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறாா். இவரது மனைவி பிரியா. இவா் இருசக்கர வாகனத்தில் மகன் நரேன் தேஜாவுடன் (8) கதிா்வேடு விநாயகபுரத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

கதிா்வேடு மேம்பாலம் கீழ் பகுதியில் சென்றபோது, அவ்வழியே வந்த மாநகரப் பேருந்து வளைவில் திரும்பிய நிலையில் பிரியா சென்ற இருசக்கர வாகனம் மீது பக்கவாட்டில் உரசியது.

இதில் பிரியா, அவரது மகன் நிலைதடுமாறி கீழே விழுந்தனா். அப்போது பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி, நரேன் தேஜா உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிரியா லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். பேருந்து ஓட்டுநா் வியாசா்பாடி பணிமனையைச் சோ்ந்த பாலகணேஷ் (30) என்பவரை

மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.