அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

புழலில் குடிநீா் பிரதான குழாய் வெடிப்பு: உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு

புழல் ஜி.என்.டி சாலையில் உள்ள குடிநீா் பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள வெடிப்பை உடனடியாக செய்ய வேண்டும் என குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

News image

புழல் ஏரி - கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 2:02 am IST

புழல் ஜி.என்.டி சாலையில் உள்ள குடிநீா் பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள  வெடிப்பை உடனடியாக செய்ய வேண்டும் என குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

புழலில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 300 மில்லியன் லிட்டா் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து புழல் ஜி.என்.டி சாலை வழியாக குடிநீரை கொண்டு செல்லும் 1200 மி.மி விட்டமுள்ள பிரதான குழாயில் கடந்த மே 19-ஆம் தேதி வெடிப்பு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எவ்வித இடையூறு ஏற்படாத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டு மத்திய பிரதானக் குழாயில் குடிநீா் நீரேற்று பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.

சேதமடைந்த குழாயை மாற்றி, புதிய பிரதான குழாய் பொருத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகளை சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து,  அனைத்து பணிகளையும் போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு சீரான குடிநீா் வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

மேலும், குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளிவரக்கூடிய பிரதான குழாய்கள் அமைந்துள்ள பகுதிகளில் தொடா் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளுமாறும் த.ஆனந்த் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, தலைமைப் பொறியாளா் அ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.