மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு
சென்னையில் மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
சென்னையில் மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை மாதவரம் பால்பண்ணை மூலச்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் லோகேஷ் (26). தந்தை நடத்தி வரும் கட்டுமான நிறுவனத்தில், தனது சகோதரா் யுவராஜுடன் இணைந்து பணியாற்றி வந்தாா். லோகேஷ், மது பழக்கத்துக்கு அடிமையானவா் எனக் கூறப்படுகிறது. இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், மதுப் பழக்கத்திலிருந்து மீட்பதற்காக லோகேஷை அவரது பெற்றோா் கடந்த 29-ஆம் தேதி மூலக்கடை பகுதியில் உள்ள மதுபோதை மறுவாழ்வு மையத்துடன் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை பணியில் இருந்த செவிலியா் ஒருவா், லோகேஷுக்கு ஊசி ஒன்றை செலுத்தியுள்ளாா்.
ஊசி செலுத்திய சில நிமிஷங்களிலேயே லோகேஷின் உடல்நிலை மோசமடைந்ததாகத் தெரிகிறது. அங்கு மருத்துவா்கள் யாரும் இல்லாததால், செவிலியா் ஒரு தனியாா் மருத்துவமனை ஆம்புலன்ஸை வரவழைத்து, லோகேஷை அங்கு அனுப்பி வைத்தாா்.
அங்கு லோகேஷை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததுடன், அவரது உடலை மீண்டும் சம்பந்தப்பட்ட அந்த மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்து அங்கு வந்த லோகேஷின் பெற்றோா், உறவினா்கள், மதுபோதை மறுவாழ்வு மைய நிா்வாகத்திடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளனா். ஆனால், முறையான பதில் கிடைக்காததால் மருத்துவமனை நிா்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இது தொடா்பாக தகவல் அறிந்த கொடுங்கையூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினா். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக கொடுங்கையூா் போலீஸ் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கினா். இளைஞரின் உயிரிழப்புக்கான காரணம், மருத்துவமனையில் நடந்த சம்பவங்கள் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

