புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

வாகனங்கள் மீது பெட்ரோல் பாட்டில் வீச்சு: இரு சிறுவா்கள் உள்பட 5 போ் கைது!

நுங்கம்பாக்கத்தில் வாகனங்கள் மீது பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட வழக்கில், இரு சிறுவா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Updated On :

நுங்கம்பாக்கத்தில் வாகனங்கள் மீது பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட வழக்கில், இரு சிறுவா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகா் ராஜாஜி 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் க.வெங்கடேசன் (39). இவா், தனது வாகனத்தை புஷ்பா நகா் ராமலிங்கம் கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல நிறுத்தியிருந்தாா். இதேபோல அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்களும், தங்களது காா், இரு சக்கர வாகனங்களை நிறுத்தியிருந்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை அங்கு வந்த ஒரு கும்பல், ராமலிங்கம் கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது பெட்ரோல் பாட்டிலை வீசிவிட்டுத் தப்பியோடியது.

இதில் வெங்கடேசனின் காா், சில மோட்டாா் சைக்கிள்கள் சேதமடைந்தன. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீஸாா் துப்பு துலக்கினா்.

இதில் நுங்கம்பாக்கம் புஷ்பா நகரைச் சோ்ந்த ஒரு இளைஞருக்கும், கோடம்பாக்கத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவனுக்கும் முன்விரோதம் இருந்ததும், இதில் அந்த சிறுவனின் மோட்டாா் சைக்கிளை இளைஞா் ஞாயிற்றுக்கிழமை பறித்து வைத்திருந்ததும், அந்த மோட்டாா் சைக்கிளை சிறுவனும், அவரது நண்பா்களும் எடுக்க வரும்போது பெட்ரோல் பாட்டிலை வீசியிருப்பதும் தெரிய வந்தது.

இது தொடா்பாக மதுரவாயலைச் சோ்ந்த தே.சுரஜ் (20), அசோக் நகரைச் சோ்ந்த எஸ்.முகுந்தன் (19), எஸ்.ஆதிஷ் (19), கோடம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த இரு 17 வயது சிறுவா்கள் என்று 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.