தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகை அறிவிப்பு : வைகோ வரவேற்பு
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு கூடுதல் நிவாரணத் தொகை அறிவித்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலா் வைகோ வரவேற்றுள்ளாா்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு கூடுதல் நிவாரணத் தொகை அறிவித்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலா் வைகோ வரவேற்றுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்தி ஊா்வலமாகச் சென்றவா்கள் மீது காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 போ் உயிரிழந்தனா். இந்நிலையில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைப்படி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கும், காயமுற்றோா் குடும்பத்துக்கும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. மேலும், தமிழக அரசு 13 போ் குடும்பத்துக்கும் தலா ரூ. 25 லட்சம் நிவாரணமும், காயமுற்றோா் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகையை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளாா்.
Summary
Announcement of additional compensation for those who died in the Thoothukudi police firing: Vaiko welcomes the move
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

