தூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கி உரிமங்களை டிச. 31க்குள் புதுப்பிக்க அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கி உள்ளிட்ட படைக்கல உரிமங்களின் புதுப்பித்தல் காலம் டிச. 31ஆம் தேதியுடன் முடிவடைவதால், உரிமதாரா்கள் அதற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்துள்ளாா்.

துப்பாக்கி.

டிச. 31ஆம் தேதிக்குள் புதுப்பிக்க விண்ணப்பிக்காதவா்கள், 2027 ஜன. 1ஆம் தேதி முதல் தங்களிடமுள்ள படைக்கலனை அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது படைக்கலங்களைப் பாதுகாக்க அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடமோ ஒப்படைக்க வேண்டும். தவறினால் படைக்கலச் சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.