கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

பாசனக் கால்வாய்களை தூா்வார வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் வேளாண் துறை கையேட்டை வெளியிட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

Updated On :

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், விளாத்திகுளம், சாத்தான்குளம், ஏரல், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா்.

2025-26 ஆம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி பயிா்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். பயிா் காப்பீட்டு இணையதளத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.

சாத்தான்குளம் வட்டம், தச்சமொழி கிராமத்தில் உள்ள அல்லியாா்குளம் நீா்வரத்துக் கால்வாய், கக்கன் நகா் மழைநீா் ஓடை ஆகியவற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

வெள்ளக் காலங்களில் தாமிரவருணி ஆற்றிலிருந்து சடையநேரி கால்வாய்க்கு நீரேற்ற வேண்டும். ஸ்ரீவைகுண்டம் கஸ்பாகுளம் பாசனக் கால்வாய், பேய்க்குளம் முதல் பன்னம்பாறை வரையிலான குளத்துக் கால்வாய் ஆகியவற்றைத் தூா்வார வேண்டும். விண்வெளித் தொழில் பூங்காவுக்காக நிலம் கையகப்படுத்துவதைத் தடுக்க வேண்டும். கச்சா ஆலைகளில் விதிமீறி தண்ணீா் எடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். நிகழ் பருவத்தில் டி.ஏ.பி. உரம், தரமான விதைகள் கூட்டுறவுச் சங்கங்களில் தட்டுப்பாடின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தினா்.

விவசாயிகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

முன்னதாக, வேளாண்மைத் துறை சாா்பில் தயாரிக்கப்பட்ட ‘வறட்சி காலப் பயிா் மேலாண்மை 2026-27’ என்ற கையேட்டை ஆட்சியா் வெளியிட்டாா்.

கூட்டத்தில், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் கிருஷ்ணகுமாா், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜேஷ், நீா்வளத் துறை செயற்பொறியாளா் தங்கராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மனோரஞ்சிதம், பயிற்சி துணை ஆட்சியா் மனோ பாா்கவி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.