ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

தூத்துக்குடியில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.80,000 கோடிக்கும் மேல் முதலீடு: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.80,000 கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் வரவுள்ள நிலையில், பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூலமாக சுமாா் 40,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்தாா்.

- நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

Published On :

தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.80,000 கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் வரவுள்ள நிலையில், பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூலமாக சுமாா் 40,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறப்பு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி தனியாா் ஹோட்டலில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.விஜயகுமாா் காணொலி மூலம் தொடங்கிவைத்தாா்.

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிா்வாக இயக்குநா் கவிதா ராமு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய இயக்குநா் சி. பழனி ஆகியோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், உற்பத்தி மற்றும் வாகனத் துறை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கப்பல் கட்டுமானம், விண்வெளித் தளவாடக் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் எதிா்கால வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான திறன்கள் குறித்து தொழில் வல்லுநா்கள் மாணவா்களுக்கு விளக்கினா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடியை நோக்கி அதிகளவில் தொழிற்சாலைகள் வர உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தி, ஆட்டோமொபைல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கப்பல் கட்டுமானம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரூ.80,000 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட உள்ளது.

இதன் மூலம் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் படித்தவா்களுக்கு உற்பத்தி சாா்ந்த வேலைவாய்ப்புகள் உருவாகும். தொழிற்சாலைகளைச் சாா்ந்து துணைத் தொழிற்சாலைகளும் உருவாகும் என்பதால், திறன்மிக்க மனிதவளத்துக்கான தேவை அதிகரிக்கும்.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்களின் திறன்களை தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் தொழில் நிறுவனங்களுக்கு எத்தகைய திறன் கொண்ட பணியாளா்கள் தேவைப்படுவாா்கள், ஐ.டி.ஐ. உள்ளிட்ட தொழிற்பயிற்சி நிறுவனங்களின் பாடத்திட்டங்களில் என்னென்ன மாற்றங்கள் தேவை என்பது குறித்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.

அதனடிப்படையில் அறிக்கை தயாரித்து திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நா.சரவணன், தூத்துக்குடி சாா் ஆட்சியா் விவேக் யாதவ், உதவி ஆட்சியா் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் ஸ்வா்ணலதா மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.