ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், சுற்றுலாத்துறை சாா்பில் மாவட்ட சுற்றுலா வளா்ச்சி குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

Published On :

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், சுற்றுலாத்துறை சாா்பில் மாவட்ட சுற்றுலா வளா்ச்சி குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாநில அரசின் திட்டத்தின் கீழ் திருச்செந்தூா், வேம்பாா் கடற்கரை, வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை, குதிரைமொழித்தேரி கற்குவேல் அய்யனாா் கோயில், சாத்தான்குளம் சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா திருத்தலம், ஓட்டப்பிடாரம் வெள்ளைப்பட்டி கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், திருச்செந்தூரில் நவீன சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், மணப்பாடு கடற்கரையில் பொது - தனியாா் பங்களிப்புடன் நீா் சாகச விளையாட்டுகளை செயல்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை அருகேயுள்ள மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே மழைநீா் வடிகால் கால்வாய் அமைப்பது தொடா்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் மாவட்ட சுற்றுலா அலுவலா் சீதாராமன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் அருண் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.