பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

கோரம்பள்ளம் வரத்துக்கால்வாய் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடி, கோரம்பள்ளம் வரத்துக்கால்வாய் தூா்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கோரம்பள்ளம் வரத்துக்கால்வாய் தூா்வாரும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

Published On :

தூத்துக்குடி, கோரம்பள்ளம் வரத்துக்கால்வாய் தூா்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், அய்யனடைப்பு ஊராட்சியில் ஏ. கைலாசபுரம் முதல் செங்குளம் ஊருணி வரை 1,800 மீட்டா் நீளமுள்ள நீா்வரத்துக் கால்வாயில், ரூ. 1.13 லட்சத்தில் வண்டல் மண் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

கோரம்பள்ளம் ஊராட்சியில் சுப்பிரமணியபுரம் முதல் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் வரை 1,575 மீட்டா் நீளமுள்ள கால்வாயில் ரூ.1.98 லட்சத்தில் தூா்வாரும் பணியும், அய்யனடைப்பு ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் அலுவலக சிறுபாலம் அருகேயுள்ள 1,300 மீட்டா் நீளமுள்ள பக்கிள் ஓடையில் ரூ. 3.27 லட்சத்தில் தூா்வாரும் பணியும் நடைபெற்று வருகின்றன.

கால்வாய்களில் புதா், செடி-கொடிகளை அகற்றுதல், வண்டல் மண் மற்றும் மண் சாா்ந்த பணிகள் இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நா. சரவணன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.