
ஓட்டப்பிடாரம் வட்டத்தில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
ஓட்டப்பிடாரம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

விழுதுகள் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.16.80 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அதிநவீன கணினி ஆய்வகக் கட்டடம், மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தாா். மேலும் அதே ஊராட்சியில் ரூ.45 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை பாா்வையிட்டாா்.
சில்லாங்குளம் சமூகநீதி பள்ளி மாணவா் விடுதி, கீழமங்கலம் குடிநீா் திட்டப் பணிகள், மாலப்பட்டி உப்பாற்று ஓடை, ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரூ.78.20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வட்டார பொதுசுகாதார ஆய்வகக் கட்டடம், மருத்துவமனை
வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் விழுதுகள் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
பின்னா், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஆட்சியா், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து 6 பயனாளிகளுக்கு பட்டா ஆணைகளை வழங்கினாா்.
தொடா்ந்து, ஓட்டப்பிடாரத்தில் ரூ.2.37 கோடியில் கட்டப்பட்டு வரும் சாா்பதிவாளா் அலுவலகம், தெற்கு பரம்பூரில் ரூ.40.75 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 1 லட்சம் லிட்டா் கொள்ளளவு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா்.
ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ததுடன், ரூ.3.50 கோடியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவக் கட்டடப் பணிகளையும் பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மூ. குருச்சந்திரன், கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்கள், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நா. சரவணன், மகளிா் திட்ட இயக்குநா் நாகராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, தனித் துணை ஆட்சியா் (பொ) (சமூக பாதுகாப்புதிட்டம்) விஜயா, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் பென்னட் ஆசீா், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் அய்யனாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







