கஞ்சா கடத்திய 5 போ் கைது
எண்ணூா் பகுதியில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சா, ரூ.6.42 லட்சம், ரூ.12 லட்சம் இங்கிலாந்து பவுண்டு ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனா்.

கைது
எண்ணூா் பகுதியில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சா, ரூ.6.42 லட்சம், ரூ.12 லட்சம் இங்கிலாந்து பவுண்டு ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனா்.
சென்னை எண்ணூா் பகுதியில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, சென்னையில் இருந்து மீஞ்சூா் நோக்கி வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, சுமாா் 2.6 கி கஞ்சாவை போலீஸாா் கண்டறிந்து பறிமுதல் செய்தனா். மேலும், ஹவாலா தொடா்புடையதாகச் சந்தேகப்படும் ரூ.6.42 லட்சம், ரூ.12 லட்சம் இங்கிலாந்து பவுண்டு நோட்டுகள், பட்டுப் புடவைகள் மற்றும் மருந்து பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சோ்ந்த ஆஷிக் அலி (29), அபுபக்கா் சித்திக் (21), முகமது இஸ்மாயில் (19), உசாமா பதுரூா் ரஹ்மான் (24) மற்றும் முகமது ஷேக் அப்துல்லா (22) உள்ளிட்ட 5 பேரை கைதனா்.
உயர்ரக கஞ்சா மற்றும் இந்திய, இங்கிலாந்து நாட்டு பணத்தை மலேசியாவுக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

