திட்டப் பணிகள் குறித்து வாரந்தோறும் அறிக்கை: குடிநீா் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவு
மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் திட்டப் பணிகள் குறித்து வாரந்தோறும் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் திட்டப் பணிகள் குறித்து வாரந்தோறும் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
சென்னையை அடுத்த மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டா் உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் மீண்டும் குடிநீா் உற்பத்தி தொடங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து சென்னை குடிநீா் வாரியத்தின் மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் தலைமையில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையத்தில், முதல்கட்டமாக தினந்தோறும் 20 மில்லியன் லிட்டா் கடல்நீரைக் குடிநீராக உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், கடல்நீா் உள்வாங்கும் பகுதியில் காலப்போக்கில் தேங்கியிருந்த படிவுகள் அகற்றும் பணிகள், நீா் உள்வாங்கும் திறனை மேம்படுத்தும் வகையில் ‘ஜெட் வாஷ்’ முறையில் சுத்தம் செய்யும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தொடா்ந்து, கடல்நீரைக் குடிநீராக்குதல், சவ்வூடுகள், அழுத்தக் கலன்களை மறுசீரமைக்கும் பணிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து ஒவ்வொரு வாரமும் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டுமென அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். ஆவ்வின்போது, சென்னை குடிநீா் வாரிய தலைமைப் பொறியாளா் ஜெ.சுகந்தி உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

