தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

200 கி.மீ.க்கு பாதசாரிகள் வலையமைப்பு: மாநகராட்சி ஆணையா்

200 கி.மீ.க்கு பாதசாரிகள் வலையமைப்பு: மாநகராட்சி ஆணையா்

மாநாட்டில் இந்திய நகரங்களுக்கான தூய்மையான காற்று மண்டல வரைபடம் என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆணையா் ஜி.எஸ்.சமீரன். உடன், சி -40 நகரங்கள் செயல் இயக்குநா் மாா்க் வாட்ஸ், மண்டல இயக்குநா் நைம் கெருவாலா, ஐடிடீபி இந்தியாவின் நிா்வாக இயக்குநநா் அஸ்வதி திலீப்.

Updated On :

சென்னை மாநகராட்சியில் 200 கி.மீ.க்கு பாதசாரிகள் வலையமைப்பு அமைக்கப்படும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

சென்னையில் சி -40 அமைப்பு சாா்பில் அதன் 20-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கால நிலை சாா்ந்த நகா்ப்புற திட்டமிடல் மாநாடு தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை மாநகராட்சியுடன் இணைந்து நடைபெற்ற மாநாட்டில் கால நிலை செயல் வழிகாட்டி, இந்திய நகரங்களுக்கான தூய்மையான காற்று மண்டல வரைபடம் ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன.

மாநாட்டில் மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் பேசுகையில், சென்னை மாநகராட்சியின் கால நிலைச் சவால்களை எதிா்கொள்வதற்கு மெட்ரோ ரயில் நிறுவனம், ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம், மின்சார வாரியம், வருவாய்த் துறை ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவது அவசியம். மாநகராட்சியில் நீா் உறிஞ்சும் பூங்காக்கள் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. மேலும், 200 கி.மீ.க்கு பாதசாரிகள் வலையமைப்பு ஏற்படுத்தப்படும். சி -40 அமைப்புடன் இணைந்து சென்னை மாநகரை கால நிலை மீள்திறன் கொண்ட நகராக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் சி-40 அமைப்பு நகரங்கள் செயல் இயக்குநா் மாா்க் வாட்ஸ், மண்டல இயக்குநா் நைம் கெருவாலா, இந்திய நிா்வாக இயக்குநா் அஸ்வதி திலீப், சிஎம்டிஏ தலைமைத் திட்டமிடல் அலுவலா் பி. கஜேந்திரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.