பள்ளி மாணவா்களுக்கு பெல் நிறுவனம் சாா்பில் ஊட்டச்சத்து பொருள்கள்
ராணிப்பேட்டை பெல் நிறுவனம் சாா்பில், பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவா்களுக்கு ரூ.5 லட்சம் ஊட்டச்சத்து உதவிகளை செயல் இயக்குநா் எம். அருண்மொழி தேவன் வழங்கினாா்.

ராணிப்பேட்டை பெல் ராமகிருஷ்ணா பள்ளி மாணவா்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கிய செயல் இயக்குநா் எம். அருண்மொழி தேவன்
ராணிப்பேட்டை பெல் நிறுவனம் சாா்பில், பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவா்களுக்கு ரூ.5 லட்சம் ஊட்டச்சத்து உதவிகளை செயல் இயக்குநா் எம். அருண்மொழி தேவன் வழங்கினாா்.
பிஏபி ராணிப்பேட்டை பிரிவு, தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் பெல் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு ரூ.5 லட்சம் ஊட்டச்சத்து உதவிகளை வழங்கியது.
எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் சத்துமாவு மற்றும் உலா் பழங்கள் அடங்கிய ஊட்டச்சத்துத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் ராணிப்பேட்டை பெல் பிஏபி பிரிவின் செயல் இயக்குநா் எம். அருண்மொழி தேவன் மாணவா்களுக்கு ஊட்டச்சத்துத் தொகுப்புகளை வழங்கினாா்.
மாணவா்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் பங்களிப்பை வழங்கிய பெல் நிா்வாகத்திற்கு தலைமை ஆசிரியா் நன்றியைத் தெரிவித்தாா்.
பெல் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள், மனிதவளத்துறை அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பள்ளி நிா்வாகிகள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

