முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

காா் மோதி தனியாா் நிறுவன அதிகாரி உயிரிழப்பு

காா் மோதி தனியாா் நிறுவன அதிகாரி உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

சென்னை நந்தம்பாக்கத்தில் காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவன அதிகாரி உயிரிழந்தாா். மேலும், அந்தப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காயமடைந்தாா்.

கெருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீகாந்தன் (47). தனியாா் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை மெரீனாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்றபோது நந்தம்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த காா், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீகாந்தன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில் அந்தப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 160-ஆவது வாா்டு பணியாளா் சூசம்மாள் (45) என்பவரும் பலத்த காயமடைந்தாா். அவா் கே.கே.நகா் இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். உயிரிழந்த ஸ்ரீகாந்தனின் உடல் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.