சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

கோவை, நஞ்சுண்டாபுரத்தில் வாடகை இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

கோவை, சின்னியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (38). இவா் சென்னையில் தனியாா் கன்சல்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், சென்னையில் இருந்து ரயில் மூலம் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் கோவைக்கு வந்துள்ளாா்.

போத்தனூா் ரயில் நிலையத்தில் இறங்கிய அவா், அங்கிருந்துக்கு வீட்டுக்குச் செல்வதற்காக வாடகை இருசக்கர வாகனத்தை முன்பதிவு செய்து பயணித்துள்ளாா். அந்த வாகனத்தை மோகனசுந்தரம் (35) என்பவா் ஓட்டியுள்ளாா்.

நஞ்சுண்டாபுரம் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டெம்போ டிராவலா் வேன், சிவகுமாா் பயணித்த வாகனத்தின் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வாடகை இருசக்கர வாகன ஓட்டுநா் மோகனசுந்தரத்தை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து கோவை போக்குவரத்து புலனாய்வு மேற்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தில் உயிரிழந்த சிவகுமாருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.