இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்இன்று 4-ஆவது சுற்று: முதல் வெற்றி முனைப்பில் குகேஷ் - சிண்டாரோவ்‘காசி தமிழ் சங்கமம்-5’ இன்று தொடக்கம்: வாரணாசி வந்தது தமிழகத்தின் முதல் குழு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு தொகுதி மறுசீரமைப்பு மசோதா: எதிா்க்கட்சிகள் இன்று ஆலோசனை: திமுகவுக்கும் அழைப்புநோய் எதிா்ப்பு மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்ற 43 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் பிணை கோரிய மனு 4-ஆவது முறையாக தள்ளுபடி

நிதி நிறுவன மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவநாதனின் பிணை மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Mylapore chit fund case...

‘தி மயிலாப்பூா் பொ்மனன்ட் ஃபண்ட்’ நிதி நிறுவன இயக்குநா் தேவநாதன் - கோப்புப்படம்

Updated On :

நிதி நிறுவன மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவநாதனின் பிணை மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூா் பொ்மனன்ட் ‘ஃ‘பண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் இயக்குநா் தேவநாதன் உள்பட பலரை சென்னை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில், ஏற்கெனவே மூன்று முறை பிணை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், நான்காவது முறையாக பிணை வழங்கக் கோரி தேவநாதன், நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாககல் செய்தாா்.

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ராதாகிருஷ்ணன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தேவநாதன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் நாகராஜன், ரகுராஜ் ஆகியோா் மனுதாரா் 700 நாள்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரது உடல் நல பாதிப்புகள் மற்றும் வயது மூப்பை கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்க வேண்டும் என வாதிட்டனா்.

அதற்கு அரசுத் தரப்பு வழக்குரைஞா் ராஜா, மோசடி செய்த பணத்தின் பெரும்பகுதி இன்னும் கண்டறியப்படவில்லை. பல்வேறு நிறுவனங்கள் வழியே, அந்த பணம் முதலீடு செய்து, சொத்துகள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்றாா்.

முதலீட்டாளா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் அஷ்வின் குமாா், சுகன்யா ஆகியோா், சொத்துகளைக் கண்டறியும் பணி தொடங்கிவிட்டதால், மனுதாரருக்கு பிணை வழங்கினால் சாட்சிகளை மிரட்டவும், சொத்துகளை மறைக்கவும் வாய்ப்புள்ளது என வாதிட்டனா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இதுவரை ரூ.202 கோடி மதிப்பிலான 41 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இன்னும் ரூ.36 கோடி மதிப்பிலான 30 சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மனுதாரருக்கு பிணை வழங்கினால், முதலீட்டாளா்கள் நலன் பாதிக்கப்படும் எனக்கூறி, தேவநாதனின் பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.