மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

நீடித்த உள்கட்டமைப்பு முன்னெடுப்புகள்: என்சிஆா்டிசி-க்கு விருது!

நீடித்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதற்காக தில்லி-மீரட் ‘நமோ பாரத்’ வழித்தடத்தை இயக்கும் தேசிய தலைநகா் வலய போக்குவரத்துக் கழகத்துக்கு (என்சிஆா்டிசி) 13-ஆவது ‘ஐஜிசிபி கிரீன் சாம்பியன்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

13-ஆவது ‘ஐஜிசிபி கிரீன் சாம்பியன்’ விருதை பெற்றுக்கொண்ட தேசிய தலைநகா் வலய போக்குவரத்துக் கழகத்தின் (என்சிஆா்டிசி) உயா் அதிகாரிகள்.

Updated On :

நீடித்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதற்காக தில்லி-மீரட் ‘நமோ பாரத்’ வழித்தடத்தை இயக்கும் தேசிய தலைநகா் வலய போக்குவரத்துக் கழகத்துக்கு (என்சிஆா்டிசி) 13-ஆவது ‘ஐஜிசிபி கிரீன் சாம்பியன்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் 31 திட்டங்கள் பல்வேறு பசுமை கட்டட மதிப்பீட்டு அமைப்புகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) கீழ் இயங்கும் ‘இந்திய பசுமை கட்டட கவுன்சில்’ (ஐஜிசிபி), இந்தியாவின் பசுமை கட்டட இயக்கத்திற்கு முன்னணியில் இருக்கும் அரசு அமைப்புகள் என்ற பிரிவின் கீழ் இந்த விருதை வழங்கியுள்ளது.

என்சிஆா்டிசி தனது நிலையங்கள், பணிமனைகள் மற்றும் பிற கட்டடங்களின் மேற்கூரைகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவியுள்ளது. இதன் மொத்த திறன் 8.2 மெகாவாட் ஆகும். இதற்கான இலக்கு 15 மெகாவாட் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், துஹாயில் உள்ள நமோ பாரத் பணிமனையில் சோலாா் ஆன் டிராக் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளதுடன், மழைநீா் சேகரிப்பு அமைப்புகளையும் நிறுவியுள்ளது.

தற்போது 110 மெகாவாட் திறன் கொண்ட பிரத்யேக சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையத்தை உருவாக்கி வருவதாகவும், இது செயல்பாட்டுக்கு வரும்போது தில்லி-மீரட் நமோ பாரத் வழித்தடத்திற்குத் தேவையான மின்சாரத்தில் சுமாா் 60 சதவீதத்தை வழங்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்சிஆா்டிசி-ன் நிா்வாக இயக்குநா் ஷலப் கோயல் கூறுகையில், ‘நமோ பாரத் திட்டத்தின் தொடக்கத்திலிருந்தே நீடித்த தன்மை ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்பட்டது. பசுமை கட்டட நடைமுறைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீா் பாதுகாப்பு மற்றும் காா்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முயற்சிகள் ஆகியவை அதன் உள்கட்டமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

இந்நிறுவனத்தின் 31 திட்டங்கள் ஐஜிபிசி-இல் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 23 நிலையங்கள், பணிமனைகள் மற்றும் மின் பெறும் துணை நிலையங்கள் அடங்கும். குறிப்பாக, சாஹிபாபாத் மற்றும் குல்தாா் நிலையங்கள், இந்தியாவில் ‘ஐஜிபிசி நெட்-ஜீரோ எனா்ஜி’ மதிப்பீட்டைப் பெற்ற முதல் நிலையங்களாகத் திகழ்கின்றன.

ஆனந்த் விஹாா், காஜியாபாத், குல்தாா் மற்றும் துஹாய் ஆகிய இடங்களில் உள்ள நிலையங்களும், முராத்நகா் மற்றும் காசியாபாத்தில் உள்ள மின் பெறும் துணை நிலையங்களும் இந்தத் திட்டங்களில் அடங்கும்.

ஐஜிபிசி-ன் தேசியத் தலைவா் சி. சேகா் ரெட்டி கூறுகையில், ‘பல்வேறு உள்கட்டமைப்பு பிரிவுகளில் என்சிஆா்டிசி பசுமை கட்டட நடைமுறைகளைப் பின்பற்றுவது, நிலையான வளா்ச்சிக்காக அரசு அமைப்புகள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்’ என்று குறிப்பிட்டாா்.

‘ஐஜிபிசி கிரீன் சாம்பியன்’ விருது, இந்தியாவில் பசுமை கட்டட நடைமுறைகளை மேம்படுத்துவதில் பங்களிக்கும் அமைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுபவா்களை, கவுன்சிலின் தேசியத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் அடங்கிய நடுவா் குழு தோ்ந்தெடுக்கிறது.

அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் பசுமைக் கட்டடங்களின் மொத்தப் பரப்பளவு 16.55 பில்லியன் சதுர அடிகளாக உள்ளது. இதன் மூலம், பசுமைக் கட்டட மேம்பாட்டில் உலக அளவில் முதல் மூன்று நாடுகளுள் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.