ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

மருந்துகளை சட்டவிரோதமாக விற்றால் கடும் நடவடிக்கை: மருந்தகங்களுக்கு அரசு உத்தரவு

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக மருந்துகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரித்துள்ளது.

மருந்துகள் - பிரதிப் படம்

Published On :

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக மருந்துகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரித்துள்ளது.

இது தொடா்பாக மருந்து கட்டுப்பாட்டுத் துறை இணை இயக்குநா் எஸ். குருபாரதி, மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அண்மைக் காலமாக ‘டாபென்டாடோல்’, ‘நைட்ராசிபாம்’ உள்ளிட்ட வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் மன அழுத்த நிவாரண மாத்திரைகள் தவறான முறையில் போதைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. இது மக்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

இதைத் தடுக்கும் பொருட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநா்களும் தங்களது எல்லைக்குள்பட்ட சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிலையங்களில் தொடா் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, மருத்துவா்களின் பரிந்துரை சீட்டின் அடிப்படையில்தான் மருந்துகள் வழங்கப்படுகிா, அதுகுறித்த விற்பனைப் பதிவேடுகள் சரிவர பராமரிக்கப்படுகின்றனவா, இருப்புப் பட்டியல் சரியாக உள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், ஊசி மருந்துகளை செலுத்தப் பயன்படுத்தப்படும் ஊசி சிரிஞ்சுகள் விற்பனை குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். பதிவேட்டு தகவல்களுக்கும், உண்மையான இருப்புக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மருந்துகள் பெருமளவில் கடத்தப்படுவதோ அல்லது சட்டவிரோதக் கும்பலுக்கு விநியோகிக்கப்படுவதோ கண்டறியப்பட்டால், காவல்துறையினருடன் இணைந்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.