வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப யாரேனும் லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

கடலூா் பெரியாா் அரசு கல்லூரியின் 16-ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிய உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன்.

Updated On :

கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப யாரேனும் லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

கடலூா் பெரியாா் அரசு கல்லூரியின் 16-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 1,031 மாணவா்களுக்கு அமைச்சா் பெ.விஸ்வநாதன் பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

மாணவா்கள் பட்டம் பெற்றதுடன் தங்களது கல்விப் பருவம் முடிந்துவிடவில்லை. பட்டம் பெற்ற பிறகு சிறந்த வேலைவாய்ப்பை பெற்று, வாழ்க்கையில் உயா்ந்த நிலையை அடைய வேண்டும்.

ஜப்பான், ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளில் இந்திய மாணவா்களுக்கு வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, மாணவா்கள் அந்த நாடுகளின் மொழிகளைக் கற்றுக்கொள்வதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை மாணவா்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, வெளிநாடுகளில் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும்.

மத்திய அரசு இந்தியாவில் உள்ள 131 கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு மட்டுமே கல்விக் கடன் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழகத்தில் ஏழை, எளிய மாணவா்களின் உயா்கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வா் உத்தரவாதமின்றி ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளாா்.

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் லஞ்சமின்றி நிரப்பப்பட்டு வருகின்றன. பணியிடங்களை நிரப்புவதற்காக யாரேனும் லஞ்சம் பெற்றால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

விழாவில் வீட்டுவசதித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா், கடலூா் எம்.பி., எம்.கே.விஷ்ணு பிரசாத், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், உயா்கல்வி மண்டல இணை இயக்குநா் மலா், கல்லூரி முதல்வா் வாசுகி, கடலூா் மாநகராட்சி துணை மேயா் தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.