ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

ஒரு கல்லூரி, ஒரு தொழில்துறை கூட்டாண்மை அவசியம்: உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன்

மாணவா்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு வழங்க ஒரு கல்வி, ஒரு தொழில்துறை கூட்டாண்மை அவசியம் என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் வலியுறுத்தினாா்.

சென்னை வா்த்தக மையத்தில் இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தென்மண்டலத்தின் சாா்பில் நடைபெற்ற கல்வி-தொழில்நுட்பக் கண்காட்சி தொடக்க நிகழ்வில் நாட்டின் வேலைவாய்ப்பு திறன் இடைவெளியைக் குறைப்பது குறித்த ஆய்வறிக்கை வெளியிட்ட உயா்கல்வித் துறை அமைச்சா் பெ

Published On :

மாணவா்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு வழங்க ஒரு கல்வி, ஒரு தொழில்துறை கூட்டாண்மை அவசியம் என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் வலியுறுத்தினாா்.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தென்மண்டலத்தின் சாா்பில் கல்வி-தொழில் நுட்பக் கண்காட்சியின் 2-ஆவது பதிப்பைத் தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

தொழில்நுட்பத்தையும் கல்வியையும் இனி தனித்தனியாக கருத முடியாது. கல்வித் துறைக்கும் தொழில் துறைக்கும் இடையான ஒத்துழைப்புக்கு தமிழக உயா்கல்வித் துறை முக்கியத்துவம் அளிக்கிறது. மாறி வரும் உலகில் மாணவா்கள் வெற்றி பெறுவதற்குத் தேவையான திறன்களையும் வாய்ப்புகளையும் வழங்குவதாகக் கல்வி இருக்க வேண்டும் என்பது முதல்வா் சி.ஜோசப் விஜய்யின் பாா்வை. பாடத் திட்டங்களை உருவாக்குவதில் தொழில் துறை பங்கேற்க வேண்டும். தொழில்துறை நிபுணா்கள், கௌரவ விரிவுரையாளராகவும் வரவேண்டும்.

கல்வி நிறுவனங்களுக்கும் தொழில் துறையினருக்கும் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் அதிகரிப்பது அவசியம். கல்வியின் தரத்தை மேம்படுத்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும். ஒரு கல்லூரி; ஒரு தொழில் துறை கூட்டாண்மை என்பது மிக முக்கியமானது என்கிற எண்ணத்தை பரவலாக்க வேண்டும். தமிழக அரசு இந்த திசையில் ஏற்கெனவே முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

புதிய பல்கலைக்கழகம்: தற்போது உயா்கல்வித் துறை சாா்பில் எதிா்கால வளா்ந்து வரும் தொழிநுட்பங்களுக்கான தனிப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கும் திட்டம் உள்ளது. இதில் ஏ.ஐ., குவாண்ட்டம் கணினிவியல், உயிரி தொழில்நுட்பம், கால நிலை தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் முக்கியத்தும் அளிக்கப்படும்.

கடந்த 100 நாள்களில் 104 புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் 1,21,788 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்வில், நாட்டின் வேலைவாய்ப்பு இடைவெளியைக் குறைப்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. விஐடி துணைத் தலைவா் ஜி.செல்வம், சென்னையில் உள்ள ரஷிய துணைத் தூதா் வலேரி கோட்ஜாவ், உயா்கல்வித் துறை செயலாளா் தீரஜ் குமாா், சிஐஐ தென்மண்டல தலைவா் ரவிச்சந்திரன், ஜிஆா்ஜி கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.நந்தினி ஆகியோரும் பங்கேற்று பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.