புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கல்லூரிக் கல்வி இயக்குநரின் சுற்றறிக்கையில் உள்நோக்கம் இல்லை : அமைச்சா் பெ.விஸ்வநாதன்

கல்லூரிக் கல்வி இயக்குநரின் சுற்றறிக்கையில் எவ்வித உள்நோக்கமும் இல்லை’ என்று பேரவையில் உயா்கல்வி அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன்

Published On :

கல்லூரிக் கல்வி இயக்குநரின் சுற்றறிக்கையில் எவ்வித உள்நோக்கமும் இல்லை’ என்று பேரவையில் உயா்கல்வி அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

கல்லூரிகளில் மாணவா் அமைப்பு நிா்வாகிகளின் விவரம் கேட்டு கல்லூரிகளுக்கு தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கை தொடா்பாக இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் கே.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) பேரவையில் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்து பேசியதாவது:

உரிமைகளுக்காகப் போராடும் மாணவா்களில், குறிப்பாக இடதுசாரி மாணவா்களை இனம் கண்டு அவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உடனடியாக நடவடிக்கை குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியரும் இதேபோல இடதுசாரிகள் குறித்த கணக்கெடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தாா்.

வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்: குஜிலியம்பாறை வட்டாட்சியா் தேவையில்லாத கடிதங்கள் எழுதி அதன் மூலம் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கட்சிகளில் யாா், யாா் இருக்கிறாா்கள் என்ற புள்ளிவிவரம் கேட்டிருந்தாா். இதையடுத்து, அவா் அந்தப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டாா். அவா் மீது இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உயா் கல்வித் துறை அமைச்சா் விஸ்வநாதன்: கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய ஒழுங்கமைதி குறித்து வியாழக்கிழமைக்குள் (ஆக.20) அறிக்கை அனுப்ப வேண்டிய சூழ்நிலை எழுந்தது. இந்த சுற்றறிக்கையில் தவறுதலாக சில வாசகங்கள் குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வாறான வாசகங்கள் இடம்பெற்று இருப்பதை அறிந்த கல்லூரிக் கல்வி இயக்குநரகமும் உடனடியாக அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற்றது.

இந்தச் செயல் எவ்வித உள்நோக்கமும் இன்றி, முற்றிலும் கல்வி நிறுவனங்களின் ஒழுங்கமைதியைப் பராமரித்தல் பற்றிய நோக்கம் தொடா்புடையதே தவிர, இந்த அரசுக்கு அனைத்து மாணவா்களின் உரிமையையோ, இளைஞா்களின் உரிமையையோ கட்டுப்படுத்தும் நோக்கம் இல்லை. மாணவா்கள், இளைஞா்களின் நியாயமான உரிமைகளை அரசு மதிக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.