இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்பு!

போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்க தடை விதித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கம் நாளை (ஆக. 20) போராட்டம் அறிவித்துள்ளதைப் பற்றி...

News image

இந்திய மாணவர் சங்கத்தினர்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 1:18 pm IST

இடதுசாரி கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதை தடை செய்ய கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டிருந்ததைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கம் நாளை (ஆக. 20) போராட்டம் அறிவித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு, நீட் தேர்வு ரத்து, அரசுப் பணித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து கட்சிகளின் இந்திய மாணவர்கள் சங்கத்தினர் (எஸ்எஃப்ஐ) மற்றும் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பினர் (ஏ.ஐ.எஸ்.எஃப்) போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தலைநகர் தில்லி ஜந்தர் மந்தரில்மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்துக்கு ஆதரவாக சென்னையிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி, அதில் வெற்றியும் பெற்றனர்.

இடதுசாரிக் கட்சிகள் மற்றும் சிஜேபி போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் அனுப்பிய சுற்றறிக்கை சமூக ஊடகங்களில் வெளியானது.

அதில், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே துறை இடைத்தொடர்பு, ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த நடவடிக்கையை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் நாளை போராட்டம் நடத்தப் போவதாக இந்திய மாணவர் சங்கம் அறிவித்திருக்கிறது.

“மாணவர்கள் என்பதற்காக அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறிக்க முடியாது; மாணவர்களின் அரசியல் பங்கேற்பை கண்காணித்து ஒடுக்குவதா? தவெக அரசின் உத்தரவை கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்” என்றும் எஸ்எஃப்ஐ அறிவித்துள்ளது.

Summary

The Students' Federation of India has announced a protest for tomorrow (August 20) following an order by the Directorate of Collegiate Education banning college students from participating in protests organized by Left-wing parties.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.