இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்!

இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை விதித்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது பற்றி...

News image

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் - கோப்புப் படம்

Updated On :19 ஆகஸ்ட் 2026, 12:34 pm IST

இடதுசாரி கட்சிகளின் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய உத்தரவை தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்ககம் திரும்பப் பெற்றது.

நீட் தேர்வு ரத்து, தேர்வு முறைகேடு, பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் மாணவர்கள் சார்ந்த பிரச்னைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து அக்கட்சிகளின் எஸ்.எஃப்.ஐ. மற்றும் ஏ.ஐ.எஸ்.எஃப். மாணவர் அமைப்பினர் போராடுவது வழக்கம்.

சமீபத்தில் தில்லியில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்துக்கு ஆதரவாக சென்னையிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் சிஜேபி போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் அனுப்பிய சுற்றறிக்கை சமூக ஊடகங்களில் வெளியானது.

அதில், ”இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே துறை இடைத்தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கையை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் நாளை போராட்டம் நடத்தப் போவதாக இந்திய மாணவர் சங்கம் அறிவித்த நிலையில், அந்த அலுவலகக் கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Story image

முன்னதாக, நேற்று திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இடதுசாரிகள் உறுப்பினர்கள் குறித்த தகவல்களை திரட்ட வட்டாட்சியர் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Ban on students participating in Left-wing protests withdrawn!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.