FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை! தமிழக கல்வித் துறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்புரூ. 300 கோடியில் பெரம்பூரில் பன்னோக்கு மருத்துவமனை: முதல்வர் விஜய் அறிவிப்பு! முதல்வர் காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்வு: முதல்வர்‘ஆளுங்கட்சி என்ற அதிகார போதையில்..’ தவெகவினருக்கு அண்ணாமலை எச்சரிக்கை!அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை! தமிழக கல்வித் துறை

இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தடுக்கும் நடவடிக்கை பற்றி...

News image

கோப்புப்படம் - EPS

Updated On :19 ஆகஸ்ட் 2026, 11:03 am IST

இடதுசாரி கட்சிகளின் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு கல்லூரிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் சார்ந்த பிரச்னைகளில் மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து அக்கட்சிகளின் எஸ்.எஃப்.ஐ. மற்றும் ஏ.ஐ.எஸ்.எஃப். ஆகிய மாணவர் அமைப்பு போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.

சமீபத்தில் தில்லியில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்துக்கு ஆதரவாக சென்னையிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் சிஜேபி போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் தெரிவித்திருப்பதாவது:

”இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே துறை இடைத்தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை உடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Story image

முன்னதாக, நேற்று திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இடதுசாரிகள் உறுப்பினர்கள் குறித்த தகவல்களை திரட்ட வட்டாட்சியர் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Summary

Ban on students participating in Left-wing protests! Department of higher Education.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.