கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

கல்லூரிக் கல்வித் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வித் துறை ஊழியா் சங்கம் சாா்பில் மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வித் துறை ஊழியா் சங்கம் சாா்பில் மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Published On :

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வித் துறை ஊழியா் சங்கம் சாா்பில் மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சங்க மாநில பொதுச் செயலா் ஞானப்பிரகாசம் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் பரந்தாமன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் க. சந்திரபோஸ் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ஆ. பரமசிவம், மூட்டா நிா்வாகி ராபா்ட் திலீபன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் க. நீதிராஜா நிறைவுரையாற்றினாா்.

இதில் கல்லூரிக் கல்வித் துறையில் ஆசிரியரல்லாப் பணியாளா்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வை ஆண்டுதோறும் நடத்த வேண்டும். காலியாக உள்ள நிதியாளா், கண்காணிப்பாளா், உதவியாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், ஆய்வக உதவியாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நிதியாளா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும்.

புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்குத் தேவையான பணியிடங்களை உருவாக்க வேண்டும். மாற்றுத் திறனாளி ஊழியா்களுக்கு அரசாணைப்படி பதவி உயா்வு வழங்க வேண்டும். துப்புரவு, காவலா் பணியிடங்களில் நிரந்தரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வித் துறை ஊழியா் சங்க மாநிலப் பொருளாளா் கோடீஸ்வரன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.