ஜார்க்கண்ட்டில் தேர்வுகள் ரத்து செய்வதாக அறிவித்ததை அடுத்து, மாணவர் தலைவர் தேவேந்திரநாத் மஹதோ தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தோ்வாணையம் (பிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வு, ஜேஎஸ்எஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள்கள் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி, 3 வாரங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி கடந்த ஆக. 10 ஆம் தேதி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், சட்டப்பேரவையை நோக்கி பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.
போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும் தண்ணீரை பீய்ச்சியடித்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தினர். இதற்கிடையில், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர் தலைவர் மஹதோ உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
மாணவர்கள் போராட்டத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் உருவபொம்மபிகள் எரிக்கப்பட்ட நிலையில், போராட்டம் நேற்றுடன் 16-ஆவது நாளை எட்டியது.
அதனைத் தொடர்ந்து, முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்றும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் டிஎஸ்ஆா் டேட்டா பிராஸஸ்ஸிங் நிறுவனம் என்ற ஒப்பந்த நிறுவனம் மூலம், மாநிலத்தில் நடத்தப்பட்ட அனைத்து வேலைவாய்ப்புத் தேர்வுகள், ஜேஎஸ்எஸ்சி - சிஜிஎல் தேர்வு ஆகியவற்றை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இதனால், மாணவர்கள் தங்களது போராட்டத்தைத் திரும்ப பெறுவதாக அறிவித்தனர்.
16 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவர்கள் சங்கத் தலைவர் தேவேந்திரநாத் மஹதோ, அமைச்சர்கள் தீபிகா பாண்டே சிங் மற்றும் இர்பான் அன்சாரி ஆகியோர் முன்னிலையில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். 2014 முதல் ஜார்க்கண்டில் நடத்தப்பட்ட ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை மூலம் விசாரணை நடத்தவும் ஜார்க்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதற்காக மாணவர்களையும் முதல்வர் ஹேமந்த் சோரனையும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் விடியோ அழைப்பில் பாராட்டினார்.
Summary
Student leader Devendra Mahto ended his hunger strike after Jharkhand cancelled the JSSC-CGL exam and TDPL recruitment processes. Mahto demanded a law protecting students from fraud. Sonam Wangchuk praised the students and Chief Minister Hemant Soren for accepting their demands.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






