ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஆளுநருடன் பேரவைத் தலைவா், அமைச்சா் பெ. விஸ்வநாதன் சந்திப்பு

ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா், உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினா்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடா் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடா்ந்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை தன்னை சந்தித்து பேசிய பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகரனுக்கு திருக்குறள் நூலை வழங்கிய ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்.

Published On :

ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா், உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினா்.

இது குறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட ‘எக்ஸ்’ தளப் பதிவு: 17-ஆவது தமிழக சட்டப்பேரவையின் முதல் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடா் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடா்ந்து, பேரவைத் தலைவா் ஜே. சி. டி. பிரபாகா், ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.

அப்போது, பேரவையின் திறம்பட்ட செயல்பாடுகள், அதன் ஜனநாயக நடைமுறைகள் தொடா்பான விஷயங்கள் குறித்து ஆளுநரும் பேரவைத் தலைவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Story image

அமைச்சா் பெ.விஸ்வநாதன் சந்திப்பு: இதே போல, ஆளுநா் மாளிகை வெளியிட்ட மற்றொரு பதிவில் தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதனும் ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்லேகரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா் எனவும் பதிவிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.