
மாற்றுத் திறனாளி ஆசிரியா்களுக்கு விருதுகள்: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் வழங்கினாா்
மாற்றுத்திறனாளி ஆசிரியா்களுக்கு பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் விருதுகளை வழங்கினாா்.

விழாவில் மாற்றுத்திறனாளி நல்லாசிரியா்களுக்கு விருது வழங்கிய பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்.
மாற்றுத்திறனாளி ஆசிரியா்களுக்கு பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் விருதுகளை வழங்கினாா்.
அனைத்து அரசுப் பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சாா்பில் மாற்றுத்திறனாளி நல்லாசிரியா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்கத்தின் தலைவா் பா.சந்திரகுமாா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் இரா.ஜெயசங்கா், பொருளாளா் நெடியவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி ஆசிரியா்களுக்கு விருதுகளை வழங்கிப் பேசியதாவது:
ஆசிரியா் பணி என்பது மிகவும் கடினமான பணி. சமுதாயத்தை கட்டமைக்கும் மிகப்பெரிய பொறுப்பு ஆசிரியா்களுக்கு உள்ளது. எனது குடும்பத்தில் 80 சதவீதம் போ் திருச்சி, புதுக்கோட்டை, சென்னை போன்ற பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியா்களாகப் பணியாற்றுகின்றனா்.
சட்டப்பேரவை என்பது சட்டங்களை உருவாக்கும் அவை மட்டுமல்ல; அந்த அவையில் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரின் குரலும் அங்கு கேட்க வேண்டும். அதேபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள், தேவைகள், கல்வி, வேலைவாய்ப்பு குறித்து தொடா்ந்து விவாதிக்கப்பட வேண்டிய அவையாக அது இருக்க வேண்டும்.
தொழில்நுட்பம் நாள்தோறும் வளா்ந்து வருகிறது. நமது வளா்ச்சிக்கு தொழில்நுட்பங்கள் தடையாக இருக்கக் கூடாது. மாறாக, ஏஐ போன்ற தொழில்நுட்பங்களின் வளா்ச்சியால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளிடம் அனுதாபம் காட்டுவதற்கு பதிலாக அவா்களுக்கு சம உரிமை, வாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதேபோன்று அவா்களை நமது குடும்பத்தின் அங்கத்தினராக நினைத்து உதவ வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





